search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தேர்தலில் நேர்மையை பாதுகாக்க முக்கியத்துவம் - மார்க் ஜுக்கர்பர்க்
    X

    இந்திய தேர்தலில் நேர்மையை பாதுகாக்க முக்கியத்துவம் - மார்க் ஜுக்கர்பர்க்

    இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் ஒருமைப்பாட்டையும், நேர்மையையும் பாதுகாக்க பேஸ்புக்கில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார். #FB #cambridgeanalytica #MarkZuckerberg
    வாஷிங்டன்:

    சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னர் பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

    பின்னர், வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க் ஜுக்கர்பர்க் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின்னர் பிரான்ஸ் அதிபர் தேர்தலும், ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலும், அமெரிக்காவின் அலாபாமா பகுதிக்கான சிறப்பு தேர்தலும் நடைபெற்றன. இந்த தேர்தல்களுக்கு இடையில் எங்களிடம் இருந்த பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளை நாங்கள் சீர்படுத்தி விட்டோம்.

    பேஸ்புக் பயனாளிகள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க இந்த ஆண்டுக்குள் சுமார் 20 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க தீர்மானித்துள்ளோம். போலி அடையாளங்களுடன் பேஸ்புக்கில் புதிய கணக்கு தொடங்குபவர்களை கண்டுபிடித்து, தடை செய்யும் புதிய சாதனங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம்.

    2018-ம் ஆண்டு தேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான ஆண்டாகும். இந்தியா, பிரேசில், மெக்சிகோ, பாகிஸ்தான், ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளன. இந்த தேர்தல்களில் நேர்மையையும், ஒருமைப்பாட்டையும்,  பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு பேஸ்புக் நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #FB #cambridgeanalytica #MarkZuckerberg
    Next Story
    ×