சிட்னி:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஹனனா டிகன்சன் (24). இவர் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உதவும் படியும் சமூக வலைதளங்களில் தனது போட்டோவுடன் பதிவு செய்திருந்தார்.
அதை அவர்களது பெற்றோரும் நம்பினர். அதற்காக நண்பர்களும், பொதுமக்களும் பல லட்சம் ரூபாயை சிகிச்சைக்காக வழங்கினர். அந்த பணத்தை அவர் தனது கோடை விடுமுறை கொண்டாட்டத்துக்காக செலவு செய்தார்.
இதற்கிடையே இவர் புற்றுநோய் என ஏமாற்றி பணம் வசூலித்த தகவல் தெரிந்த ஒரு நபர் போலீசில் புகார் செய்தார். எனவே அவரை கைது செய்த போலீசார் மெல்போர்ன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு ஹன்னா டிகன்சனுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.