search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக் பயனாளிகளின் தகவல் கசிவு - அமெரிக்கா பாராளுமன்ற குழு விசாரணையில் மார்க் ஜுக்கர்பக் ஆஜர்
    X

    பேஸ்புக் பயனாளிகளின் தகவல் கசிவு - அமெரிக்கா பாராளுமன்ற குழு விசாரணையில் மார்க் ஜுக்கர்பக் ஆஜர்

    பல லட்சக்கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்த விவகாரத்தில் வரும் 11-ம் தேதி அமெரிக்க பாராளுமன்ற குழு விசாரணையில் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.
    வாஷிங்டன்:

    சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னர் வரும் 11-ம் தேதி பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.

    மேற்கண்ட தகவலை இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க பாராளுமன்ற விசாரணை குழுவினர், ’இணையதளங்களில் பதிவிடப்படும் தங்களைப்பற்றிய தகவல்கள் என்னவாகின்றன? என்னும் தகவல் பாதுகாப்பு அம்சம் தொடர்பாக அமெரிக்க மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள இந்த விசாரணை ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும். இந்த விசாரணையில் ஆஜராக சம்மதம் தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பர்க்-ம் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர். #FaceBook #TamilNews
    Next Story
    ×