search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் - காரணம் இதுதான்
    X

    யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் - காரணம் இதுதான்

    தீவிர சைவ கொள்கையை கடைபிடிக்கும் நசிம் அக்தாம் என்ற பெண் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிசூடு நடத்தி, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். #YoutubeHQShooting
    சான் பிரான்சிஸ்கோ:

    பிரபல வீடியோ இணையதளமான யூடியூப் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேற்று அலுவலக வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.

    இதில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து, தாக்குதல் நடத்திய பெண் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அந்த பெண் குறித்த தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். சான் தியேகோ நகரைச் சேர்ந்த நசிம் அக்தாம் என்பவர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

    தீவிர சைவ கொள்கைகளை கடைப்பிடித்த நசிம் அக்தாம் விலங்குகள் உணவுக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் கொல்லப்படுவதை தீவிரமாக எதிர்த்து பரப்புரை செய்து வருபவர். யூடியூப் தளத்தில் தனக்கென சேனல் ஒன்றை தொடங்கிய நசிம் அக்தாம், தனது கொள்கை மற்றும் பாரசீக கலாச்சாரங்களை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.

    நசிம் அக்தாம் கணினியில் உள்ள பதிவு

    இந்நிலையில், சமீப காலமாக அவரது சேனலில் பதிவிடும் வீடியோக்களின் பார்வைகளுக்கு (views) ஏற்ப யூடியூப் நிர்வாகம் வருமானத்தை பகிர்ந்து தருவது இல்லை என அக்தாம் கருதியுள்ளார். இதற்கேற்ப, தனது கணினியில் இது தொடர்பான பதிவுகளை அவர் வைத்துள்ளார். இதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    தாக்குதலுக்கு உள்ளான மூன்று நபர்களுக்கும், நசிம் அக்தாமுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை. எனவே, மேற்கண்ட பிரச்சனை காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நசீம் அக்தாமுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    #YoutubeHQShooting #TamilNews
    Next Story
    ×