search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட, தென் கொரிய தலைவர்கள் பேச்சுவார்த்தை - அடுத்த மாதம் 27-ந் தேதி நடக்கிறது
    X

    வட, தென் கொரிய தலைவர்கள் பேச்சுவார்த்தை - அடுத்த மாதம் 27-ந் தேதி நடக்கிறது

    வட, தென் கொரிய தலைவர்கள் பேச்சு வார்த்தையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சியோல்:

    தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, பகை நாடுகளாக திகழ்ந்து வந்த வடகொரியாவும், தென்கொரியாவும் நட்பு பாராட்டத் தொடங்கி உள்ளன. இரு தரப்பு பகை உணர்வு மாறி நேசம் துளிர்த்து வருகிறது.

    இந்த நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்து பேச முடிவானது.



    இது தொடர்பாக இரு தரப்பு உயர் மட்டக்குழுவினரும் நேற்று எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள பான்முன்ஜோம் ஒருங்கிணைப்பு பெவிலியனில் சந்தித்துப் பேசினர். அதில் கிம் ஜாங் அன்- மூன்ஜே அன் பேச்சு வார்த்தையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை, பான்முன்ஜோமில் உள்ள தென்கொரியாவின் சமாதான இல்லத்தில் நடைபெறும்.இரு தரப்பினரும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.கொரியப்போருக்கு பின்னர் இந்த இல்லத்துக்கு வரக்கூடிய முதல் வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்தான் என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த பேச்சுவார்த்தையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, இரு தரப்பு உயர் மட்டக்குழுவினரும் வரும் 4-ந் தேதி மீண்டும் கூடிப்பேசுவது என முடிவு செய்து உள்ளனர்.

    கிம் ஜாங் அன்னும், மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசிய பிறகு, வரும் மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கிம் ஜாங் அன் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்புக்காக தான் ஆவலுடன் காத்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×