search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை - டிரம்ப் உத்தரவு
    X

    அமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை - டிரம்ப் உத்தரவு

    அமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். #Trump #Transgenders #USmilitary
    வாஷிங்டன்:

    அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவரும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை விதிக்கும் உத்தரவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இந்த முடிவை எதிர்த்து ராணுவத்தில் பணியாற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதிபரின் உத்தரவுக்கு கோர்ட் தடை விதித்தது.

    இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவை நீக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்துள்ளார்.

    தங்களது உடலமைப்பு பற்றிய உறுதியான நிலைப்பாடு இல்லாத நிலையில் தங்களது பாலின அடையாளம் தொடர்பான மனத்தடுமாற்றத்துடன் உளவியல் சிகிச்சை அல்லது உறுப்புமாற்று அறுவை சிகிச்சை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மாற்றுப் பாலினத்தவர்களை இனி ராணுவப் பணிகளில் சேர்க்க கூடாது என அரசின் அறிவிக்கை உத்தரவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    எனினும், சில சிறப்பு நிகழ்வாக ராணுவத்தின் சில பிரிவுகளில் இதுபோன்றவர்களை அனுமதிக்கலாம். அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை செயலாளரும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளரும் இதற்கான முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணுவத்தை சேர்ந்த மூத்த உயரதிகாரிகள் மற்றும் பிற தலைவர்களின் தீவிர ஆய்வுக்கு பின்னர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் பரிந்துரையின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    எனினும், தற்போது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவரும் மாற்றுப் பாலினத்தவர்களின் வேலைக்கு இந்த புதிய உத்தரவால் பாதகம் ஏதும் நேராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tamilnews
    Next Story
    ×