search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்சில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலி
    X

    பிலிப்பைன்சில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலி

    பிலிப்பைன்சில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 13 வியாபாரிகள் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே பதவிக்கு வந்த நாள் முதல் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 20 மாதங்களில் போலீஸ் நடவடிக்கையின்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு உள்ள புலகான் மாகாணத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.



    அப்போது போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. போலீசாரை நோக்கி போதைப்பொருள் வியாபாரிகள் துப்பாக்கியால் சுட்டனர். போலீஸ் படையினரும் தங்கள் துப்பாக்கிகளால் தகுந்த பதிலடி தந்தனர். இதில் 13 வியாபாரிகள், போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.

    இந்த ஒரு நாள் நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 19 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதேபோன்று 250 பாக்கெட் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதத்தில் புலகான் மாகாணத்தில் ஒரே நாளில் நடந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது 32 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது. 
    Next Story
    ×