search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்வெளியில் புதிய ப்ளாக் ஹோல்- ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அர்ப்பணித்த ரஷ்ய விஞ்ஞானிகள்
    X

    விண்வெளியில் புதிய ப்ளாக் ஹோல்- ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அர்ப்பணித்த ரஷ்ய விஞ்ஞானிகள்

    விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ப்ளாக் ஹோலை மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அர்ப்பணித்து ரஷ்ய விஞ்ஞானிகள் சிறப்பித்துள்ளனர். #blackhole #stephenhawking #russianastronauts
    மேட்ரிட்:

    விண்வெளியில் கண்டெடுக்கப்படும் ப்ளாக் ஹோல் ( கருந்துளை) எனப்படுவது நட்சத்திரங்கள் தங்கள் ஆற்றலை இழந்த பிறகு முழுவதுமாக செயலிழப்பதால் ஏற்படுகிறது. இதனால் அந்த இடத்தில் ப்ளாக் ஹோல் ஏற்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார். ப்ளாக் ஹோலானது ஒருவித கதிர்வீச்சை வெளியிடும். அதற்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் புதிய ப்ளாக் ஹோலை கண்டறிந்துள்ளனர். இதனை, ஸ்பெயினிள் அமைக்கப்பட்டுள்ள மாஸ்டர்-ஐஏசி ரோபோடிக் டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ளனர். இந்த ப்ளாக் ஹோலை மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அர்ப்பணித்து சிறப்பித்துள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங் ப்ளாக் ஹோலின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

    ப்ளாக் ஹோலானது தனது எல்லைக்குள் வரும் அனைத்து துகள்களையும் உள்ளிழுக்கும் ஆற்றல் கொண்டது. #blackhole #stephenhawking #russianastronauts #tamilnews

    Next Story
    ×