search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் கால்பதிக்கும் சர்ச்சை வரலாறு கொண்ட பிகினி ஏர்லைன்ஸ்
    X

    இந்தியாவில் கால்பதிக்கும் சர்ச்சை வரலாறு கொண்ட பிகினி ஏர்லைன்ஸ்

    பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன பிகினி உடைகளுடன் பணிப்பெண்களை கொண்ட வியெட்ஜெட் ஏர்லைன்ஸ் தனது சேவையை இந்தியாவில் வழங்க உள்ளது.
    ஹனோய்:

    வியட்நாம் நாட்டின் தனியார் விமான சேவை நிறுவனமான வியெட்ஜெட் ஏர்லைன்ஸ் மற்ற விமான நிறுவனங்களை விட வித்தியாசமானது. எல்லா வினான நிறுவனங்களிலும் உள்ள பெண் பணிப்பெண்கள் நாகரீக உடை அணிந்து பயணிகளை கவனித்துவரும் நிலையில், வியெட்ஜெட் ஏர்லைன்ஸில் எல்லா பணிப்பெண்களும் டூ-பீஸ் உடையில் தான் பயணிகளை கவனிக்கின்றனர்.

    2011-ம் ஆண்டு பெண் தொழிலதிபர் ஒருவரால் தொடங்கப்பட்ட இந்த விமான நிறுவனம் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து இந்தியாவின் புதுடெல்லிக்கு நேரடி விமானம் இல்லாத நிலையில், வியெட்ஜெட் ஏர்லைன்ஸ் அந்த குறையை தீர்த்து வைக்க உள்ளது.

    வாரத்தில் நான்கு நாட்கள் ஹனோய் - புதுடெல்லி விமான சேவை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்தோனேசியாவுக்கு இந்த விமான சேவை இயக்கப்பட்ட போது, அந்நாட்டு அரசு பணிப்பெண்கள் முழு உடை அணிந்து வர வேண்டும் என கோரியது. இதனை அடுத்து, பண்டிகை நாட்கள் போன்ற சிறப்பு பயணங்களில் மட்டும் பிகினி பணிப்பெண்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.



    சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் நடந்த விளையாட்டுப்போட்டி ஒன்றில் வியட்நாம் அணி தோல்வியடைந்து இந்த விமானத்தில் நாடு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது, வீரர்களை உற்சாகப்படுத்துகிறேன் என்ற பெயரில் பணிப்பெண்கள் கெட்ட ஆட்டம் போட்ட விவகாரம் சர்ச்சையானது. பின்னர், வியட்நாம் அரசு விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க, நிறுவன சி.இ.ஓ மன்னிப்பு கோரினார்.

    எனினும், மிக்குறைவான பயணக்கட்டணத்தில் சேவை வழங்குவதால் இந்நிறுவனம் லாபத்திலேயே இயங்கி வருகிறது. பயணிகள் எந்த மனநிலையில் இருந்தாலும், அவர்களது பயணத்தை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதே இலக்கு என்கிறார் இந்நிறுவன சி.இ.ஓ.

    இந்தியாவுக்கும் இதேபோல பிகினி உடை கொண்ட பணிப்பெண்களுடன் விமானம் இயக்கப்பட்டால், எதிர்ப்பு கிளம்புமா? வரவேற்பு கிடைக்குமா? என்பது போகப்போக தெரியவரும்.
    Next Story
    ×