search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச மகிழ்ச்சி தினமான இன்று அன்பை பகிர்வோம்
    X

    சர்வதேச மகிழ்ச்சி தினமான இன்று அன்பை பகிர்வோம்

    சர்வதேச மகிழ்ச்சி தினமான இன்று பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.#InternationalDayOfHappiness
    புதுடெல்லி:

    சர்வதேச மகிழ்ச்சி தினமானது இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியாக இருப்பது மனிதர்களின் அடிப்படை உரிமை என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் இந்த ஆண்டிற்கான கருப்பொருள், மகிழ்ச்சியை பகிர்வோம்- உறவுகளுக்கிடையேயான அன்பு, இரக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவுதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்பதாகும்.



    சர்வதேச மகிழ்ச்சி தினத்திற்கு பல தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பாபு, மத்தியப்பிரதேச மந்திரி சிவ்ராஜ் சவுகான், நடிகர்கள் மோகன் லால், சித்தார்த் மல்கோத்ரா, நடிகை பிரியா வாரியர் மற்றும் பலர் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளனர்.

    உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியா 137-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #InternationalDayOfHappiness #tamilnews

    Next Story
    ×