search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு
    X

    ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

    பெண்களை போன்று ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு டைமெதென்ட்ரலோன் அன்டிகோனேட் அல்லது ‘டி.எம்.ஏ.யூ’ என பெயரிடப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    குழந்தை பிறப்பை தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்களுக்கு அதுபோன்ற மாத்திரைகள் எதுவும் இல்லை. கருத்தடை ஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பு தடுக்கப்படுகிறது.

    தற்போது பெண்களை போன்று ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு டைமெதென்ட்ரலோன் அன்டிகோனேட் அல்லது ‘டி.எம்.ஏ.யூ’ என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த மாத்திரையை ஆண்கள் தினமும் ஒன்று வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பாதுகாப்பானது. குழந்தை பிறப்பை தடுக்க கூடியது. மாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டெபானி பேஜ் உள்ளிட்ட பேராசிரியர்களால் இந்த மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது. 18 முதல் 50 வயது வரையிலான நல்ல உடல் நலத்துடன் கூடிய 100 பேரிடம் இந்த மாத்திரை பரிசோதிக்கப்பட்டது.

    தினமும் சாப்பிடும் இத்தகைய மாத்திரைக்கு பதிலாக ஊசி மருந்து அல்லது ஜெல் போன்றவைகளை உருவாக்கலாம் என பெரும்பாலான ஆண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×