search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன ராணுவ மந்திரியாக வேய் பெங்கே நியமனம்
    X

    சீன ராணுவ மந்திரியாக வேய் பெங்கே நியமனம்

    சீன புதிய ராணுவ மந்திரியாக முன்னாள் ஏவுகணைப்பிரிவு தளபதியும், அதிபர் ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவருமான வேய் பெங்கே நியமிக்கப்பட்டார்.
    பீஜிங்:

    சீனாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய அரசு தற்போது பதவியேற்று வருகிறது. இதில் புதிய ராணுவ மந்திரியாக முன்னாள் ஏவுகணைப்பிரிவு தளபதியும், அதிபர் ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவருமான வேய் பெங்கே (வயது 63) நேற்று அந்த நாட்டு பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

    சீனாவின் ஒன்றுபட்ட ஏவுகணைப்பிரிவின் கடைசி தளபதியாக பணியாற்றிய இவர், ஏவுகணை தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கியவர் ஆவார். இதனால் ‘ஏவுகணை மனிதன்’ என்றும் அழைக்கப்பட்டார். உலக அளவில் மிகப்பெரிய ராணுவமான சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், அதிபர் ஜின்பிங் தலைமையிலான ராணுவ கமிஷனின் கீழ் இயங்கி வருகிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற ஜின்பிங், நாட்டின் ராணுவத்தை முற்றிலும் சீரமைத்ததுடன், வீரர்களின் எண்ணிக்கையையும் 23 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைத்தார். இந்த சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு வேய் பெங்கே உறுதுணையாக இருந்தார். சீன ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ள வேய் பெங்கே, தனது முதல் வெளிநாட்டு விருந்தினராக இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை வரவேற்க இருக்கிறார். டோக்லாம் பிரச்சினைக்குப்பிறகு இரு நாடுகளுக்கு இடையே நிலவும் தூதரக பேச்சுவார்த்தைக்கு மத்தியில், நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் (ஏப்ரல்) சீனப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×