search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத அக்காவை சுட்டுக்கொன்ற 9 வயது தம்பி
    X

    வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத அக்காவை சுட்டுக்கொன்ற 9 வயது தம்பி

    அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் வீடியோ கேம் விளையாட அக்கா அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த 9 வயது தம்பி அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. நேற்று மதியம் டிஜோனே ஒயிட் (13) என்பவர் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நகர போலீசார், சிறுவன் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
    Next Story
    ×