search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவின் பிரதமர் பதவியில் லி கெகியாங் மீண்டும் நியமனம்
    X

    சீனாவின் பிரதமர் பதவியில் லி கெகியாங் மீண்டும் நியமனம்

    சீனாவின் பிரதமர் லி கெகியாங் மீண்டும் தொடர்ந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அப்பதவியில் இன்று நியமனம் செய்யப்பட்டார். #China #LiKeqiang
    பீஜிங்:

    சீன அதிபராக க்சி ஜின் பிங் பதவி வகிக்கிறார். சீனாவில் ஒருவர் 2 தடவை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். க்சி ஜின் பிங் கடந்த 2013-ம் ஆண்டு முதன் முறையாக அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    எனவே அவர் வருகிற 2023-ம் ஆண்டு வரை மட்டுமே தொடர்ந்து அதிபர் பதவி வகிக்க முடியும். ஆனால் அவர் சீனாவின் சக்தி மிகுந்த தலைவராக உருவெடுத்தார்.

    மத்திய ராணுவ கமி‌ஷனின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சீன ராணுவத்தின் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுள்ளார்.

    சீன அதிபர் பதவி வகிக்கும் காலவரம்பு நீக்கி கடந்த 11-ந்தேதி தேசிய மக்கள் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்தை வரவேற்ற 2900 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அதன் மூலம் க்சி ஜின் பிங் ஆயுள் முழுவதும் அதிபர் பதவி வகிக்க வழி செய்யப்பட்டுள்ளது. மாவோக்கு பிறகு அப்பெருமை க்சி ஜின் பிங்குக்கு கிடைத்துள்ளது. அவரது நெருங்கிய நண்பர் வாங் குய்ஷான் துணை அதிபராகிறார்.

    இந்த நிலையில், சீனாவின் பிரதமர் லி கெகியாங் மீண்டும் தொடர்ந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அப்பதவியில் இன்று நியமனம் செய்யப்பட்டார். லி கெகியாங் அடுத்த ஐந்தாண்டுகள் இந்த பதவியில் நீடிக்க ஆதரவு தெரிவித்து 2,964 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

    சீனாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்புத்துறை இயக்குனரையும் இன்று பாராளுமன்றம் தேர்வு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #China #LiKeqiang
    Next Story
    ×