search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்கலம் மூலம் எரிகல்லை உடைத்து நொறுக்க நாசா திட்டம்
    X

    விண்கலம் மூலம் எரிகல்லை உடைத்து நொறுக்க நாசா திட்டம்

    சூரியனை சுற்றி வரும் மிகப்பெரிய பென்னு என்ற எரிகல்லை அணு விண்கலம் மூலம் விண்ணிலேயே அடித்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.
    லண்டன்:

    சூரியனை ஏராளமான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றை விண்கல் அல்லது எரிகல் என்று அழைக்கின்றோம். பூமியை நோக்கி வரும் போது அவைகள் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில் சில எரிகற்கள் பூமியில் வந்து விழுகின்றன.

    அதனால் பூமியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது 73 எரிகற்கள் சூரியனை சுற்றி வருவதாக நாசா விண்வெளிமையம் கண்டுபிடித்துள்ளது. அவ்றில் சில பூமியை தாக்கும் அபாயம் உள்ளது.

    தற்போது பென்னு என்ற மிகப்பெரிய எரிகல் சூரியனை சுற்றி வருகிறது. அது 1600 அடி அகலம் கொண்டது. அது மணிக்கு 63 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அது தற்போது பூமியில் இருந்து 5 கோடியே 40 லட்சம் மைல் தொலைவில் உள்ளது. அது பூமியை தாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும்.

    எனவே கடந்த 1999-ம் ஆண்டு முதல் இதன் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பென்னு என்ற எரிகல்லை விண்ணிலேயே அடித்து உடைத்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.



    அதற்காக மிகப்பெரிய அணு விண்கலம் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு ‘கேமர்’ (சுத்தியல்) என பெயரிடப்பட்டுள்ளது. பென்னு எரிகல் மட்டுமின்றி மற்ற எரிகற்களை உடைத்து நொறுக்க இது பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×