search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்திப்பை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தது வடகொரியா
    X

    அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்திப்பை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தது வடகொரியா

    அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்திப்பை கடைசி நிமிடத்தில் வடகொரியா ரத்து செய்துவிட்டது
    சியோல்:

    தென் கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டி காரணமாக வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவானது போன்ற தோற்றம் எழுந்தது.

    இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கலந்துகொண்டார். அவர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் வடகொரிய உயர் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அதற்கு தயாராகவும் இருந்தார். அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்று இருந்தால் அதுவே அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையாக அமைந்து இருக்கும். ஆனால் இந்த சந்திப்பை கடைசி நிமிடத்தில் வடகொரியா ரத்து செய்துவிட்டது. இதை ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு தெரிவித்து உள்ளது. இதுபற்றி மைக் பென்ஸ்சின் பணியாளர் குழு தலைவர் நிக் அயர்ஸ் கருத்து தெரிவிக்கையில், “அவர்கள் பேச்சுவார்த்தையில் இருந்து ஓட்டம் எடுத்து விட்டனர். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஒரு போதும் ஈடுபாடு காட்டியது கிடையாது” என கூறினார்.

    மேலும், “இந்த நிர்வாகம், கிம் விருப்பப்படிதான் செயல்படும்” என்றும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், நாம் சமரசம் செய்துகொள்ளாத வகையில் நமது தகவலை தெரிவிப்போம் என்று ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்து இருந்தார். அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில், பேச்சுவார்த்தைக்கான நமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டார். 
    Next Story
    ×