search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் கண்டுபிடிப்பு
    X

    இலங்கையில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் கண்டுபிடிப்பு

    இலங்கையில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் பழங்குடியினர்களாக வாழ்த்து வருவதாக கண்டறியும் சோதனையில் தெரியவந்துள்ளது.
    கொழும்பு:

    தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஆந்திர பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது.

    தற்போது தெலுங்கு மொழி பேசுபவர்கள் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வாழ்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அகிகுந்தாசா என்ற பழங்குடியின மக்கள் ஆவர்.

    இவர்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்கின்றனர். அந்த இனம் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அவர்களில் நூற்றுக் கணக்கானவர்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

    இவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாம்பு பிடிப்பதையும், அவற்றை வேடிக்கை காட்டியும் பிழைப்பு நடத்துகின்றனர். இவர்கள் தீண்டதகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.

    இத்தகவலை ஆந்திர பிரதேச கலாசார கமி‌ஷனின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார். இலங்கையை இறுதியாக ஆண்ட மன்னர் இவர்களை அங்கு அழைத்து சென்று இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    ஆந்திராவில் இருந்து விரைவில் ஒரு அதிகாரிகள் குழு இலங்கை செல்ல இருக்கிறது. அவர்கள் இப்பழங்குடியினரை சந்தித்து அவர்கள் பற்றிய மேலும் பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.
    Next Story
    ×