search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய நாடுகளை சீனா மிரட்டி வருவதை ஏற்க முடியாது என அமெரிக்கா கருத்து
    X

    ஆசிய நாடுகளை சீனா மிரட்டி வருவதை ஏற்க முடியாது என அமெரிக்கா கருத்து

    மக்கள் தொகையிலுல் பொருளாதாரத்திலும் ஆயுத பலத்திலும் வலுப்பெற்றுவரும் சீனா, ஆசிய நாடுகளை மிரட்டி வருவதை நாங்கள் ஏற்க முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    தென்சீனக்கடலில் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக பிரச்சனை நீடித்து வருகின்றது. இதற்கிடையே, செயற்கையாக தீவு அமைத்து அங்கு ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.

    சீனாவின் செயல்பாடுகளால் உஷார் அடைந்துள்ள அமெரிக்கா தனது போர் கப்பல்கள் அவ்வப்போது தென்சீனக் கடலில் ரோந்து விடுகின்றன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு கமிட்டி கூட்டத்தில், கிழக்காசிய மற்றும் பசுபிக் நாடுகள் விவகாரங்களுக்கான துணை செயலாளர் சூசன் தோர்ண்டன் சமீபத்தில் பேசியுள்ளார்.

    “சீனாவுடன் பாதுகாப்பான உறவை மேற்கொள்வதில் டிரம்ப் நிர்வாகம் தெளிவாக உள்ளது. பல்வேறு பிரச்சனைகளை நிர்வகிக்க இரு நாடுகளுக்கும் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும். ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளை சீனா அச்சுறுத்தி, மிரட்டி வருவதை ஏற்க முடியாது.” என சூசன் பேசினார்.

    மேலும், “ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு எடுக்கு ம் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்” எனவும் அவர் கூறினார். சூசனின் கருத்துக்கு சீனா இன்னும் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    #China #US #TamilNews
    Next Story
    ×