search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலர் தினத்திற்காக வானத்தில் ஹார்ட் வரைந்து கொண்டாடிய பிரட்டன் விமானம் நிறுவனம்
    X

    காதலர் தினத்திற்காக வானத்தில் ஹார்ட் வரைந்து கொண்டாடிய பிரட்டன் விமானம் நிறுவனம்

    காதலர் தினத்திற்காக பிரிட்டனை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று வானத்தில் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து ஹார்ட் வடிவத்தை வரைந்து கொண்டாடியுள்ளது. #ValentinesDay #VirginAtlanticplane #planedrawsheartshape
    லண்டன்:

    உலகம் முழுவதும் நேற்று முன்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதை கொண்டாடும் வகையில் லண்டனை சேர்ந்த விமானி ஒருவர் வானத்தில் ஹார்ட் வரைந்து இருக்கிறார். பிரட்டனை சேர்ந்த விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் அவர் இந்த செயலை செய்துள்ளார். இதற்காக அவர் வானில் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார்.

    அந்த ஏர்பஸ் ஏ330 என்ற விமானம் லண்டனில் உள்ள கட்விக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 கிலோமீட்டர் தூரம் சென்று கடலுக்கு மேலே 2 மணி நேரம் சுற்றி இதய வடிவத்தை வரைந்திருக்கிறது. அந்த விமானத்திற்கு ஹாங்கிடாங் மேன் என்ற பெயரும் உள்ளது. பின் மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி இருக்கிறார்கள்.

    அந்த நிறுவனத்தின் ஏர் டிராபிக் குழு இதுகுறித்த வீடியோவை வெளியிட்டிருக்கிறது. விமானி எப்படி கட்சிதமாக, மற்ற விமானங்களில் மோதாமல் ஹார்ட்டை வரைந்தார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இவ்வளவு தூரம் சென்று, கடலுக்கு மேல் ஹார்ட் வரைய எவ்வளவு செலவாகி இருக்கும் என அவர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு அந்த நிறுவனம் இப்போது விளக்கம் அளித்துள்ளது. இது புதிய விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் விமானம் ஆகும். பயிற்சி அளிக்கும் போதே இந்த சாதனை செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். #ValentinesDay #VirginAtlanticplane #planedrawsheartshape #tamilnews

    Next Story
    ×