search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹபீஸ் சயீத்தின் போதனை மையம், மருத்துவ மையங்களை கைப்பற்றியது பாகிஸ்தான் அரசு
    X

    ஹபீஸ் சயீத்தின் போதனை மையம், மருத்துவ மையங்களை கைப்பற்றியது பாகிஸ்தான் அரசு

    மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மத போதனை மையம் மற்றும் மருத்துவ மையங்களை பாகிஸ்தான் அரசு இன்று கைப்பற்றியுள்ளது. #Pakistan #Mumbaiattacks #HafizSaeed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக ஐ.நா. அறிவித்தது. லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐ.நா. தடை விதித்துள்ளது.

    ஐ.நா. பட்டியலில் மொத்தம் 27 தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் உள்ளன. ஹபீஸ் சயீதை தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. 

    இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ள தனி நபர்கள், தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய வகை செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைன் சமீபத்தில் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டார். ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்து சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாகிஸ்தானின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையமும் உறுதி செய்துள்ளது. 

    இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மத போதனை மையம் மற்றும் மருத்துவ மையங்களை பாகிஸ்தான் அரசு இன்று கைப்பற்றியது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மத போதனை மையம் மற்றும் மருத்துவ மையங்கள் ராவல்பிண்டி மாகாண நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றை அப்பகுதி மக்களுக்கு பயன்படும் விதமாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், அங்கு பயின்று வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்யும்படி வலியுறுத்தப்பட்டு உள்ளது’ என தெரிவித்துள்ளனர். #Pakistan #Mumbaiattacks #HafizSaeed #tamilnews
    Next Story
    ×