search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா முழுவதும் பாக். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி - அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
    X

    இந்தியா முழுவதும் பாக். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி - அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

    இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. #India #Pakistan #US
    வாஷிங்டன்:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் பெருமளவு பலியாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து காஷ்மீர் முழுவதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தற்போது ஜம்முவில் உள்ள சுஜூவான் ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    அமெரிக்க உளவுத்துறையின் டைரக்டர் டான்கோட்ஸ் அமெரிக்க பாராளுமன்றத்தின் உளவுத்துறைக்கான செனட்சபை உறுப்பினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

    செனட்சபை கூட்டத்தில் டான்கோட்ஸ் பேசியதாவது:-



    பாகிஸ்தான் தற்போது அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. புதிய ரக அணுகுண்டுகளை உருவாக்கி உள்ளது. மேலும் குறுகிய தூர தாக்குதல் நடத்தும் அதிநவீன ஆயுதங்களையும் உருவாக்கி இருக்கிறது. கடல் வழியாக தாக்கும் ஏவுகணைகள், ஆகாயவழி ஏவுகணைகள், மேலும் நீண்ட தூர ஏவுகணைகள் ஆகியவற்றை புதிதாக உருவாக்கி உள்ளது.

    இது இந்தியா உள்ளிட்ட அசிய பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பாகிஸ்தான் இந்தியாவுடன் உள்ள நட்புறவை நீடிக்க விரும்பவில்லை. அதிலிருந்து விலகிச் சென்று வருகிறது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இத்துடன் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இன்னும் மோதல் போக்கை அதிகரிக்க செய்யலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    இந்தியாவுடன் மோதலை அதிகரித்து வரும் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகவும், உள்நாட்டு பாதுகாப்பு வி‌ஷயத்திலும் பின்னடவை சந்தித்து வருகிறது. அதனுடைய நடவடிக்கைகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது.

    பாகிஸ்தான் இடம் கொடுப்பதால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக அந்த நாடு திகழ்கிறது. அங்கிருந்தபடி அவர்கள் இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துகிறார்கள். அமெரிக்காவுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள்.

    பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஏனென்றால் பாகிஸ்தான் தற்போது சீனாவுடன் உறவை மேலும் பலப்படுத்தி வருகிறது.

    புதிய வகை அணு ஆயுதங்களை உருவாக்குகிறது. தீவிரவாதிகளுடன் தொடர்ந்து உறவை அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் வகையிலும், மற்ற வகையிலான ஒத்துழைப்பு வழங்குவதிலும் அலட்சியமாக செயல்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எதிராக உள்ளன.

    இவ்வாறு டான்கோட்ஸ் பேசினார். #India #Pakistan #US
    Next Story
    ×