search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞர் மரண தண்டனையில் இருந்து தப்பினார்
    X

    சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞர் மரண தண்டனையில் இருந்து தப்பினார்

    சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர் மேல்முறையீட்டில் வெற்றி பெற்றார்.
    சிங்கப்பூர்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கோபு ஜெயராமன். இவர் மலேசியாவில் வசித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி இவர் உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்தார். அவரது மோட்டார் சைக்கிளை குடியேற்ற அதிகாரிகள் சோதித்தனர். அப்போது அதில் 3 பொட்டலங்களில் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், கோபுவை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவற்றை அவர் கடத்தி வரவில்லை என்று மறுத்தார். மேலும், அந்த மோட்டார் சைக்கிள் தனக்கு உரியது அல்ல எனவும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து அவரது உதவியுடன் அதிகாரிகள் ஹெராயின் கடத்தல்காரர்கள் பற்றி துப்பு துலக்கினர்.

    இந்த நிலையில் அவர் தன்மீதான குற்றச்சாட்டு தவறானது, தான் ஹெராயின் கடத்தி வரவில்லை என்பதை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் நிரூபித்தார். இதையடுத்து அவரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதன்மூலம் அவர் மரண தண்டனைக்கு தப்பினார். இது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×