search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது
    X

    இணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது

    ஹெச்டிசி 11 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் ரகசியமாக இணையத்தில் கசிந்திருக்கிறது. வெளியான தகவல்களில் ஹெச்டிசி 11 முக்கிய சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.
    தைபே:

    புதிய ஹெச்டிசி 11 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் முதல் முறையாக இணையத்தில் கசிந்திருக்கின்றன. இந்த ஆண்டின் இறுதி நாட்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வரும் 2017 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் ஐபோன் 7S போன்ற ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஹெச்டிசி 11 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் இணையத்தில் கசிந்திருக்கின்றன. கடந்த ஆண்டு வெளியான ஹெச்டிசி 10 ஸ்மார்ட்போன் சார்ந்த வடிவமைப்பு இந்த போனிலும் இடம் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. புதிய ஹெச்டிசி 11 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய வித்தியாசம் பின்புறம் மற்றும் டூயல் கேமரா அமைப்பு எனலாம். 

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை ஹெச்டிசி 11 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட QHD டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ஆக்டாகோர் சிப்செட் மற்றும் 8GB அளவு ரேம் வழங்கப்பட இருக்கிறது. ஹெச்டிசி வரலாற்றில் அதிக ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பதோடு போனின் வேகம் சீராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

    கேமரா அம்சங்களை பொருத்த வரை ஹெச்டிசி 11 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் கேமரா அமைப்பு, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. அத்தனை அம்சங்களை சக்தியூட்ட 3700 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் குவிக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. இது குவிக் சார்ஜ் 2.0 தொழில்நுட்பத்தை விட 20 சதவிகிதம் வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஹெச்டிசி 11 புதிய ரக சென்ஸ் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்திய சந்தையில் ஹெச்டிசி 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.46,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
    Next Story
    ×