
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கால் பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 5 சென்டிமீட்டர் மழையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பரூர் பகுதியில் 4 சென்டிமீட்டர் மழையும் பெய்தது.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
அடுத்த இருநாட்களுக்கு தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல பகுதிகளில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Heavyrain #Tamilnadurain