
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் 5 மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 56 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், மற்ற கட்சிகளை விட அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சி என்பதால் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவிப்பதற்காக இன்று மாலை 5 மணியளவில் மாநில கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்திக்கப் போவதாக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். #KarnatakaElections2018 #Yeddyurappa