விருதுநகர்:
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் அழைப்பு விடுத்த ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறி போராட்டம் நடைபெற்றது. பின்னர் இவ்விவகாரம் கல்லூரி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில், நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதுதவிர, ஓங்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை ஆளுநர் அமைத்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி இன்று மாலை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #Nirmaladevi