ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அப்போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது பிற்பகல் விசாரணை நடத்தப்படுகிறது.