
கோல்ட் கோஸ்ட்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். இன்று தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் 86.47 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஹமிஷ் பீகாக் பிடித்தார்.
இதன்மூலம், இந்தியா 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. #CWG2018 #CWGBoxing #NeerajChopra