
கோல்ட் கோஸ்ட்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். குத்துச்சண்டையில் இன்று இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீரர் பிரண்டன் இர்வினை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. #CWG2018 #CWGBoxing #GauravSolanki