பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பனாஸ்வாதி பகுதியில் காங்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு மூன்று இளைஞர்கள் மதுபோதையில் காரில் வந்துள்ளனர். திடீரென தாறுமாறாக ஓடிய கார், சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஸ்ஸாமி பாலிபேத் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.