சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது கடந்த 2-ந்தேதி அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
அன்றைய தினம் மாலையில் காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வட தமிழகத்தின் கரைப்பகுதிக்கு வந்தது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் 30 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து வட தமிழக கடலோர பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் அதே இடத்தில் நீடித்ததால் தொடர்ந்து 2 நாட்கள் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென் மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழகத்தில் இருந்து தெற்கு ஆந்திர கடற்கரை பகுதி வரை நிலவி வருகிறது.
மேலும் தமிழகத்தையொட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் மாலை, இரவு நேரங்களில் இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறில் 27 செ.மீ. மழையும், திருப்பூண்டியில் 24 செ.மீ., வேதாரண்யத்தில் 16செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., மயிலாடுதுறை, சீர்காழியில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.
பொன்னேரியில் 10 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மீனம்பாக்கத்தில் 6 செ.மீ., மகாபலிபுரம், செம்பரம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
சோழவரத்தில் 4 செ.மீ., கேளம்பாக்கம், தாம்பரம், மதுராந்தகம், பூந்தமல்லியில் 3 செ.மீ., செய்யாறில் 2 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, பூண்டியில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 19 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் குறைவாகும்.
சென்னையை பொறுத்த வரை இயல்பான மழை அளவு 32 செ.மீ. ஆனால் பெய்த மழை அளவு 62 செ.மீ. இது இயல்பை விட 93 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அந்தமான் கடல் பகுதியில் 7-ந்தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் 7-ந்தேதியும், 8-ந்தேதியும் அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.