புதுடெல்லி:
லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலம் தாழ்த்தியதால் கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக நீக்கியது.
கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாக குழுவையும் நியமித்தது.
லோதா கமிட்டி பரிந்துரைப்படி ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு உரிமை மட்டுமே உண்டு. இதை நடைமுறைப்படுத்த புதிய நிர்வாக குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி மும்பை கிரிக்கெட் சங்கம் முழுநேர உறுப்பினர் அங்கீகாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

ரஞ்சி கோப்பையை 41 முறை வென்ற மும்பை அணி
41 முறை ரஞ்சி கோப்பை வென்ற மும்பை சங்கம் இனி நிரந்தர ஓட்டுரிமையை இழக்கிறது. மும்பை கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் பொதுக்குழுவில் பங்கேற்கலாம். ஆனால் ஓட்டு போட இயலாது. அங்கு மாநில சங்கமான மராட்டிய கிரிக்கெட் சங்கம் முழுநேர உறுப்பினராக இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் பரோடா, சவுராஸ்டிரா ஆகிய சங்கங்களும் உள்ளன. அசோசியேட் உறுப்பினர்களான இவர்கள் சுழற்சி முறையில் ஓட்டு அளிப்பார்கள்.
வடகிழக்கு மாநிலங்களாக மணிப்பூர், மிஜோரம், நாகலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் முழு நேர உறுப்பினர்கள் ஆகிறார்கள். லோதா கமிட்டி பரிந்துரைப்படி இந்த மாநில சங்கங்கள் ஓட்டுரிமையை பெறுகின்றன.
இதேபோல உத்தரகாண்ட், தெலுங்கானா மாநிலங்களும் முழு நேர உறுப்பினர்களாகிறது. பீகார் மாநில சங்கமும் ஓட்டு உரிமையை பெறுகிறது. நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகே ஒட்டு உரிமையை பெறும். 30 மாநில கிரிக்கெட் சங்கங்கள் முழு நேர உறுப்பினர்களாக உள்ளன.

கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு ஆண்டுதோறும் செப்டம்பர் 30-ந்தேதி நடத்தப்பட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கிரிக்கெட் வாரியத்தில் 5 நிர்வாகிகள் உள்பட 9 பேர் இருக்க வேண்டும். தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும். மற்ற 4பேரை நியமிக்க வேண்டும்.