
தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய். இவரது மகள் சந்தியா (வயது 18). இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்.
இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேஷ். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்
நேற்று மதியம் சந்தியா வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்.
அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தாய் சருபாய், அவரது உடலை பார்த்து கதறி துடித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷை தேடினர். மாலையில் அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.