search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வில் தொண்டர்களே தலைவர்கள்- முதல்வர் பழனிச்சாமி
    X

    அ.தி.மு.க.வில் தொண்டர்களே தலைவர்கள்- முதல்வர் பழனிச்சாமி

    அ.தி.மு.க., தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
    சேலம்: 

    சேலத்தில் மேம்பாலம் திறப்புவிழாவில் முதல்வர் பழனிச்சாமி இன்று பங்கேற்றார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. 

    அவர் கூறியதாவது:-  "ராஜன் செல்லப்பா பேசியது குறித்த முழு விவரங்களை பார்த்த பிறகே பதிலளிக்க முடியும். அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் என்பது தவறான கருத்து, அதிமுக பலம் பொருந்திய கட்சி. அ.தி.மு.க., தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான். தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். 

    அமமுக-வில் இருந்தவர்கள் படிப்படியாக அதிமுகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். பழுத்த மரம் கல்லடிபடும் என்பது போல அதிமுக வலிமை வாய்ந்த கட்சியாகும்.  உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம்; அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.



    சேலத்தில் தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது எங்கே? என திமுக எம்.பி. தெரிவிக்க வேண்டும். குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே பாலம் திறப்பு விழாவில் திமுகவினர் பங்கேற்றனர். சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. மக்கள் வைக்கும் கோரிக்கையின்படியே பாலங்கள் கட்டப்படுகின்றன. மக்கள் பாதிக்காத அளவுக்கு சேவையும், வசதியும் செய்து தர வேண்டும் என்பதே அரசின் எண்ணம்" என கூறினார். 
    Next Story
    ×