search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்னி நட்சத்திரத்துக்கு பின்னரும் கொளுத்தும் வெயில்
    X

    அக்னி நட்சத்திரத்துக்கு பின்னரும் கொளுத்தும் வெயில்

    அக்னி நட்சத்திரத்துக்கு பின்னரும் திருத்தணி, வேலூரில் 107 டிகிரி வெப்பநிலை பதிவானது. இன்று வழக்கத்தை விட 4 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    வேலூர்:

    அக்னி நட்சத்திர வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

    வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.

    அதிகபட்சமாக 112.5 டிகிரி வரை பதிவானது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

    அதிகபட்சமாக திருத்தணி, வேலூரில் 107 டிகிரி வெப்பநிலை பதிவானது. இன்று வழக்கத்தை விட 4 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    நேற்று மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, கடலூர், மதுரை தெற்கில் 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, திருச்சியில் 102 டிகிரி, பரங்கிப்பேட்டை, சேலத்தில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது.

    தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

    குறிப்பாக திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அரபிக்கடலின் தென்பகுதிகள், மாலத்தீவு, குமரிக்கடலில் சில பகுதிகள், கிழக்கு, மத்திய வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×