search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிமுனை மெட்ரோ ரெயில் நிலையத்தில் லிப்ட் பழுதானதால் 1 மணி நேரம் தவித்த பெண் ஊழியர்
    X

    பாரிமுனை மெட்ரோ ரெயில் நிலையத்தில் லிப்ட் பழுதானதால் 1 மணி நேரம் தவித்த பெண் ஊழியர்

    பாரிமுனையில் உள்ள ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால் ‘ஹவுஸ் கிப்பிங்’ பெண் ஊழியர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார்.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை- வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள்-பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து மாதவரம்-சிறுசேரி வரை 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரிமுனையில் உள்ள ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால் ‘ஹவுஸ் கிப்பிங்’ பெண் ஊழியர் நதியா 1 மணி நேரம் சிக்கி தவித்தார்.

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை ‘லிப்ட்’ உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார். மற்ற ஊழியர்கள் நதியாவை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘லிப்ட்’ பழுதுகளை சரி பார்க்கும் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘லிப்ட்’ பழுதுகளை உடனடியாக சரி பார்க்க போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

    இதுபோல் ஏதேனும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் ஈடுபட வேண்டும். ரெயில் நிலையத்துக்கு வரும் மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×