search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ,500 கன அடியாக குறைப்பு

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 84 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 56 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 13-ந் தேதி 50.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 50.11 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 49.80 அடியாக இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் ஒரு அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
    Next Story
    ×