search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே 23-ந் தேதிக்கு பிறகு அதிமுக அரசு முடிவுக்கு வந்துவிடும்- பாலகிருஷ்ணன் பேச்சு
    X

    மே 23-ந் தேதிக்கு பிறகு அதிமுக அரசு முடிவுக்கு வந்துவிடும்- பாலகிருஷ்ணன் பேச்சு

    தமிழகத்தில் மே 23-ந் தேதிக்கு பிறகு அதிமுக அரசு முடிவுக்கு வந்துவிடும் என்று மார்க். கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தி.மு.க . வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று மாலை புதியம்புத்தூரில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தளமுத்துநகர், ஸ்பிக்நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது புதியம்புத்தூரில் பேசியதாவது:-

    பாராளுமன்றம் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 22 தொகுதி காலியாக உள்ளது. தேர்தல் ஆணையம் 18 தொகுதிக்கு மட்டும் தான் தேர்தல் நடத்தியது. மீதி ஓட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிக்கு தேர்தல் நடத்த மறுத்து விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி நிர்பந்தத்தின் காரணமாக தான் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலோடு அறிவிப்பு வெளியிடவில்லை. தேர்தலை நடத்தினால் வெற்றி பெற மாட்டோம் என எண்ணி தான் 4 தொகுதிகளிலும் தனியாக நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

    தமிழ்நாட்டின் 2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் குற்றவாளி போல் கை கட்டிக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வையுங்கள், நடத்த முடியாது என அதிகாரிகள் கூறுகிறார்கள். இன்னும் மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளாட்சித் தேர்தல் நடத்தி இருந்தால் அந்த குடிநீர் பிரச்சினை மக்கள் பிரதிநிதி மூலம் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.

    நடந்து முடிந்த 39 பாராளுமன்ற தேர்தலிலும், 18 இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைய வாக்காளர்கள் எழுதி வைத்து விட்டார்கள். 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு முடிவு வந்துவிடும். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்க வேண்டுமா? முடிவு கட்டுங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு.

    ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தால் தான் நியாயம் கிடைக்கும். கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி மக்கள் ஆயத்த ஆடை தொழிலாளர்கள், தையல் தொழில் பயிற்சி, ஆயத்த ஆடை சந்தை கேட்டார்கள். ஆனால் கிடைக்கவில்லை. 30 ஆண்டுகாலம் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக ஓட்டப்பிடாரம் இருந்து வருகிறது. தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால் புதியம் புத்தூரில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×