search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் லாட்ஜ் அறையில் அரைகுறை ஆடையுடன் சிக்கிய அழகி - புரோக்கர் கைது
    X

    கன்னியாகுமரியில் லாட்ஜ் அறையில் அரைகுறை ஆடையுடன் சிக்கிய அழகி - புரோக்கர் கைது

    கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் அறையில் விபசார தொழிலில் ஈடுபட்ட அழகி, புரோக்கர் மற்றும் லாட்ஜ் மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகளும் கன்னியாகுமரியில் ஊடுருவி சுற்றுலா பயணிகளிடம் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கன்னியாகுமரியல் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மாறு வேடங்களிலும் போலீசார் கண்காணிப்பு நடக்கிறது.

    அதேப்போல விபசார செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் தற்போது கன்னியாகுமரிக்கு பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருவதால் விபசார கும்பல் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு விபசார புரோக்கர் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை அழகியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இடையூறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த லாட்ஜ் முன்பு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சத்யன் (வயது 52) என்ற விபசார புரோக்கர் நின்றுகொண்டு விபசாரத்திற்காக சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த லாட்ஜ் அறையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஒரு அறையில் அரை குறை ஆடையுடன் அழகி ஒருவர் இருந்ததும் தெரிய வந்தது.

    போலீசாரை கண்டதும் அந்த அழகி அதிர்ச்சி அடைந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரது கைப்பையை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் அந்த லாட்ஜின் மானேஜரும் கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×