search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 109 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 40 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 52.07 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 51.92 அடியாக குறைந்தது. இதேநிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam

    Next Story
    ×