search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 ஆண்டு சரிவுக்குப் பிறகு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்ந்தது
    X

    4 ஆண்டு சரிவுக்குப் பிறகு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்ந்தது

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் இந்த ஆண்டு 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் தேர்ச்சி விகிதம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ந்துள்ளது. #CBSE #CBSE10thResults
    புதுடெல்லி:

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் cbseresults.nic.in அல்லது cbse.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக, மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.  இந்த ஆண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம், 2014ம் ஆண்டில் இருந்து படிப்படியாக குறைந்து வந்தது. 2014ல் 98.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன்பின்னர் 2015ம் ஆண்டு 97.32%, 2016ம் ஆண்டு 96.21%, 2017ம் ஆண்டு 93.06%, 2018ம் ஆண்டு 86.07% என 4 ஆண்டுகள் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.



    மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தொடர்பாக cbse.nic.in என்ற இணையதளம் மூலம் வரும் 24-ம் தேதி முதல் 25-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். #CBSE #CBSE10thResults
    Next Story
    ×