search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் நாளை வணிகர் சங்க பேரவை மாநாட்டில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்பு - த.வெள்ளையன்
    X

    தூத்துக்குடியில் நாளை வணிகர் சங்க பேரவை மாநாட்டில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்பு - த.வெள்ளையன்

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் நாளை தூத்துக்குடியில் நடைபெறும் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள் என மாநில தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் மே 5 வணிகர் தின விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 36-வது வணிகர் தின விழா, சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு தூத்துக்குடியில் நாளை (5-ந்தேதி) நடக்கிறது. இதற்காக தூத்துக்குடி ‘நிலா ஸீ புட்ஸ்’ வளாகத்தில் பிரமாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று (4-ந்தேதி) சுதேசி கண்காட்சியை மாநாட்டு தலைவர் த.வெள்ளையன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    நாளை (5-ந்தேதி) நடைபெறும் மாநாட்டில் அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா, சுனில் பாண்டே, பழ. நெடுமாறன், ஆர்.நல்ல கண்ணு, மதிவாணன்,மாதவராஜ், ரமேஷ்குமார், சுப.உதயகுமார், தெய்வசிகாமணி, இரா.லெனின், ஹென்சி திபென், எம்.கே.ராமன், ஜி.சங்கரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.

    மாநாட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வணிகர்கள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி நாளை (5-ந்தேதி) கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. மாநாட்டில் வணிகர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டில் பொதுச் செயலாளர் கே.தேவராஜ், பொருளாளர் எஸ். ஆர்.வி.ரத்னம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைலர் ஏ.ரவி, காளிதாசன், டேவிட் சன், செல்வகுமார், ஜோயல் செல்வராஜ், ராஜபாண்டியன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மாநாடு குறித்து மாநில தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது:-

    வணிகர் சங்க பேரவை சார்பில் தூத்துக்குடியில் நாளை (5-ந்தேதி) நடை பெறும் 36-வது வணிகர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டையொட்டி நாளை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து வணிகர்களுக்கும் உணவு, குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி மாநாட்டில் வணிகர் சங்க பேரவை மாநில இணை செயலாளர் நீ.அ.தங்கதுரை, எஸ். ஆர்.பி.ராஜன், பூக்கடை ஆர்.ராஜேந்திரன், பி.தட்சிணாமூர்த்தி, கே.ஜி.சந்திரசேகர், டி.மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் 1000 வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×