search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று வந்த பெண் போலீஸ் தற்கொலை
    X

    வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று வந்த பெண் போலீஸ் தற்கொலை

    சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று வந்த பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்டார்.
    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் ரெண்டிபாளையத்தை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகள் பர்வீன் பாவி (வயது 23). இவர் கடந்த 2017-ம் ஆண்டு போலீசில் சேர்ந்தார்.

    பயிற்சி முடிந்த பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் போலீசாக பணியாற்றினார். திருப்பூர் நல்லூர் திருநகரில் தாயுடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு எந்திரம் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பாதுகாப்பு பணிக்காக பர்வீன் பாவி சென்று வந்தார்.

    நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். தாயுடன் சிறிது நேரம் பேசி விட்டு இரவு தூங்கச்சென்றார். நள்ளிரவு பெண் போலீசின் அறையில் இருந்து டம்ளர் உருண்டு ஓடும் சத்தம்கேட்டது. சத்தம் கேட்டு எழுந்த தாய் சென்று பார்த்தார். அப்போது பர்வீன் பாவி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த தாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பர்வீன் பாவிக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பர்வீன் பாவி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணி பளு காரணமாக பர்வீன் பாவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×