search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்- ஜி.ராமகிருஷ்ணன்
    X

    மே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்- ஜி.ராமகிருஷ்ணன்

    மே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #gramakrishnan #marxistcommunist

    நெல்லை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாராளுமன்றத்துக்கு 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை 3-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 19-ந்தேதி 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து தொகுதி ஓட்டு எண்ணிக்கையும் மே 23-ந்தேதி நடக்கிறது.

    இதன் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மதுரையில் வாக்கு எண்ணிக்கை எந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அரசு அதிகாரி ஒருவர் சென்று ஆவணங்களின் நகல் எடுத்துள்ளார். பின்னர் மீண்டும் அங்கு கொண்டு வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. இதுபற்றி உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும்.

    தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. அவரை மாற்றி விட்டு வேறு அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளியே வரும். இந்த வி‌ஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்டு என்பது கண்துடைப்பு ஆகும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    தேவையெனில் வழக்கு தொடருவோம். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பிரதமர் மோடி பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு இடங்களிலும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் பழனி, மாநில நிர்வாகிகள் கருமலையான், சாமுவேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக லெனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள லெனின் சிலைக்கு ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  #gramakrishnan #marxistcommunist

    Next Story
    ×