search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெயினருவியில் குறைந்த அளவில் தண்ணீர் விழுவதை படத்தில் காணலாம்.
    X
    மெயினருவியில் குறைந்த அளவில் தண்ணீர் விழுவதை படத்தில் காணலாம்.

    தென்காசி பகுதியில் மிதமான மழை - மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழுந்தது

    தென்காசி, செங்கோட்டையில் மிதமான மழை பெய்துள்ளதால் மெயினரு, ஐந்தருவியில் இன்று லேசாக தண்ணீர் விழுந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவியது. நேற்று தென்காசியில் அதிகபட்சமாக 80 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. செங்கோட்டை பகுதியில் இன்று காலை வரை 33 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசியில் 5.4 மில்லிமீட்டரும், குண்டாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.

    கடும் வெப்பம் நிலவுவதால் அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. பாபநாசம் அணையில் 23.45 அடியாக நீர்மட்டம் குறைந்துவிட்டது.

    இதனால் அணையில் 202.30 மில்லியன் கனஅடி நீர்மட்டுமே உள்ளது. இந்த தண்ணீர் இன்னும் 1 வாரத்திற்கு மட்டுமே போதுமானது. அதன் பிறகு மழை பெய்யாவிட்டால் பாபநாசம் அணை மூடப்பட்டு விடும்.

    மணிமுத்தாறு அணையில் மட்டுமே ஓரளவு நீர் இருப்பு உள்ளது. அங்கு 74.02 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் மணிமுத்தாறு அணை தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்தப்பட உள்ளது. சேர்வலாறு அணையில் 47.61 அடியாக நீர்மட்டம் உள்ளது. மற்ற அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது.

    தற்போது தென்காசி, செங்கோட்டையில் மழை பெய்துள்ளதால் மெயினரு, ஐந்தருவியில் இன்று லேசாக தண்ணீர் விழுந்தது. மற்ற அருவிகளில் தண்ணீர் விழவில்லை.



    Next Story
    ×