search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக - திமுக வேட்பாளர்கள் சொத்து மதிப்பு
    X

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக - திமுக வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளும், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். #LokSabhaElections2019 #BJP #DMK
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி.யும், பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தொகுதி தேர்தல் அலுவலரான கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களில் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில் தனக்கு ரூ. 1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாகவும், தனது கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு வங்கியில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கடன் இருப்பதாகவும், தன் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த சொத்து பட்டியலில் தனக்கு, ரூ. 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

    வங்கிகளில் ரூ. 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 கடன் இருப்பதாகவும், தனது தாய் ராஜாத்தி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பிலான சொத்து இருப்பதாகவும், தன் மீதான 6 குற்றவியல் வழக்குகளில் இரண்டு வழக்குகள் முடிந்துவிட்டதாகவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #BJP #DMK

    Next Story
    ×