search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் சேர்ந்தார்
    X

    அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் சேர்ந்தார்

    அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன், திருச்சியில் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். #AMMK #VPKalairajan #DMK
    திருச்சி:

    அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் விபி கலைராஜன். முன்னாள் எம்எல்ஏவான இவர் அமமுக-வில் நேற்று திடீரென நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியிருப்பதாக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.



    இந்நிலையில், வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார். திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளார். அவரை ஸ்டாலின் வரவேற்று வாழ்த்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.பி.கலைராஜன், டிடிவி தினகரனுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து மேலும் பலர் விரைவில் திமுகவில் இணைவார்கள் என்றும் கூறினார். தலைவர் ஸ்டாலின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கட்சிப் பணியாற்ற உள்ளதாகவும் கூறினார். #AMMK #VPKalairajan #DMK
    Next Story
    ×