search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரியில் கொண்டு வரப்பட்ட 25 டன் டீத்தூளை திருடிய 3 பேர் கைது
    X

    லாரியில் கொண்டு வரப்பட்ட 25 டன் டீத்தூளை திருடிய 3 பேர் கைது

    லாரியில் கொண்டு வரப்பட்ட 25 டன் டீத்தூளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    கோயம்புத்தூர் ஜி.எம். மில் ராகவேந்திரன் காலனியை சேர்ந்தவர் ராம்வீர்சிங்.

    இவருக்கு சொந்தமான 25 டன் டீத்தூளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பொள்ளாச்சிக்கு கடந்த பிப்ரவரி 4-ந்தேதி லாரியில் ஏற்றப்பட்டது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த லாலாபாஷா ஓட்டி வந்தார்.

    இந்த லாரி திருவண்ணாமலை குறிஞ்சி குப்பம் பகுதியைச் சேர்ந்த காண்டீபன் என்பவருக்கு சொந்தமானதாகும்.

    லாரி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்த போது லாரி உரிமையாளர் காண்டீபன் டிரைவருக்கு போன் செய்து பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டாம். லாரியை செங்குன்றத்துக்கு வந்து விடு என தெரிவித்தார்.

    லாரியை காண்டீபன் லாரியை டிரைவர் லாலா பாஷாவிடமிருந்து பெற்று கொண்டு அதில் இருந்த 25 டன் டீத்தூளை சென்னை கொடுங்கையூர் டி.வி.கே லிங்க் சாலையை சேர்ந்த ராஜாவிடம் ரூ.17 லட்சத்திற்கு விற்று விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    லாரி வராததால் ராம்வீர்சிங் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, விஜய், பழனி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான காண்டீபன் தேவராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரி டம் இருந்து 25 டன் டீத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×