search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி எம்பி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் - காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தல்
    X

    கிருஷ்ணகிரி எம்பி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் - காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தல்

    கிருஷ்ணகிரி எம்.பி. தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். #RahulGandhi #Congress

    கிருஷ்ணகிரி:

    தி.மு.க. கூட்டணியில் கிருஷ்ணகிரி எம்.பி. தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதி 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    அப்போது முதல் இந்த தொகுதியில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது. 5 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்று உள்ளது.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் கிருஷ்ணகிரி எம்.பி. தொகுதியை காங்கிரஸ் கேட்டு வாங்கி உள்ளது. தென் இந்தியாவில் காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால் இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டால் நல்லது. மேலும் இந்த எல்லையில் கர்நாடக-ஆந்திர எல்லைகளும் உள்ளன.

    இந்த இரு மாநில மக்களும் இங்கு அதிகம் வசித்து வருகிறார்கள். மேலும் இந்த எம்.பி. தொகுதியில் அடங்கிய ஓசூர் சட்டமன்ற தொகுதியில் ஏராளமான சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் காங்கிரசுக்கு இந்த தொகுதியில் ஆதரவு உண்டு. எனவே இந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #RahulGandhi #Congress

    Next Story
    ×