search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. போட்டி
    X

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. போட்டி

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 28 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இப்போது தான் தி.மு.க. போட்டியிடுகிறது. #DMK #ParliamentaryConstituency

    நெல்லை:

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தான் தி.மு.க. போட்டியிடுகிறது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 1996 வரை காங்கிரஸ் எம்.பி.க்களே இருந்தனர்.

    கடந்த 1991-ம் ஆண்டு தி.மு.க. சார்பாக சதன் திருமலைக்குமார் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலம் வெற்றி பெற்றார்.

    அதன்பிறகு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. போட்டியிடவில்லை. தி.மு.க. நேரிடையாக ஒரு முறைகூட தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. இதனால் தி.மு.க. தென்காசி பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்தது. தி.மு.க. கூட்டணி சார்பாக புதிய தமிழக கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அப்பாத்துரை மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

    இதில் தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அப்பாத்துரை மட்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தி.மு.க. தென்காசி பாராளுமன்ற தொகுதியை பெரும்பாலும் கூட்டணி கட்சிக்கே விட்டு கொடுத்து வந்தது.

    தற்போது 1991-க்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரிடையாக போட்டியிடுகிறது. இதுவரை தி.மு.க. நேரிடையாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறாததால், இந்த முறை எப்படியும் தி.மு.க. வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறது.

    இதற்காக வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. புதிய தமிழகம் கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்து அதில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தர் ராஜபாளையத்தை சேர்ந்த தனுஷ்கோடி. இவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தி.மு.க. வில் சேர்ந்த போது அவருடன் தி.மு.க.வில் சேர்ந்தார். அவரது மகன் தனுஷ்குமார் தற்போது தி.மு.க. சார்பாக தென்காசி தொகுதியில் போட்டியிடபோவதாக கூறப்படுகிறது. ஆனாலும் தி.மு.க. தலைமை மேலும் சிலரது பெயர்களையும் பரிசீலனை செய்து வருகிறது.

    தி.மு.க. நேரிடையாக தென்காசி தொகுதியில் போட்டியிடுவதால், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிடும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு கடும் சவாலாக இந்த தேர்தல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் இங்கு அ.ம.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் களத்தில் குதிக்கின்றன. இதனால் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்த முறை தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும். #DMK

    Next Story
    ×